close
Choose your channels

'புஷ்பா' படத்தில் ராஷ்மிகா மந்தனா கேரக்டர்: கிறங்கடிக்கும் கிளாமர் போஸ்டர்!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ’புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ’புஷ்பா’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டன என்பது தெரிந்ததே. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனாவின் புதிய போஸ்டர் ஒன்றும் அதில் அவருடைய கேரக்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்த போஸ்டரில் ராஷ்மிகா மந்தனா கிறங்கடிக்கும் கிளாமர் போஸில் இருப்பதையும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.