close
Choose your channels

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

Monday, September 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் முடிவடைந்துவிடும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

அவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் ரவி அவானா. பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் ரவி அவானாவின் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பதும் இந்த படத்திலும் அவர் நெகட்டிவ் கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் அஜித்திடம் இருந்து பல விஷயங்கள் கற்று கொண்டிருப்பதாகவும் ரவி அவானா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.