close
Choose your channels

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யும் அடுத்த பிரபலத்தின் படம் இதுதான்!

Thursday, September 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்று வெளியான விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படம் கூட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மேலும் ஒரு பிரபலத்தின் திரைப் படத்தை ரிலீஸ் செய்யும் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த வகையில் சற்றுமுன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை கலைஞர் டிவி பெற்றிருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் ’விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் இன்னும் ஓரிரு மாதங்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.