close
Choose your channels

வருத்தப்பட்ட ரியோவின் மனைவி: வைரலாகும் டுவீட்

Tuesday, November 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தாங்கள் மிஸ் செய்யும் நபர்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் மிஸ் செய்யும் நபர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினர். இதில் அனிதா பேசியது குறித்து சர்ச்சையும் எழுந்தது என்பது தெரிந்ததே

இந்த டாஸ்க்கில் ரியோ பேசியபோது தனது மனைவி மற்றும் குழந்தையை மிஸ் செய்வதாக நெகிழ்ச்சியுடன் பேசினார். அவரது பேச்சும் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் கூட சக போட்டியாளர்கள் அவரது பேச்சுக்கு எந்தவித விமர்சனமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து ரியோவின் மனைவி ஸ்ருதி தனது டுவிட்டரில், ‘நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ருதி ரவி என்பவரை காதலித்து ரியோராஜ் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ரிதி என்ற குழந்தை உள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.