close
Choose your channels

நீ யாருடா அஜித்தை விமர்சிப்பதற்கு? ஆவேசமான ஆர்கே சுரேஷ்

Sunday, March 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் , தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடித்து தயாரித்த ’விசித்திரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சில சினிமா விமர்சகர்களை ஆர்கே சுரேஷ் தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த விழாவில் ஆர்கே சுரேஷ் பேசியபோது, ‘அஜித் சாரை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது என்றும், சினிமாவை நம்பி இருப்பவர்களுக்கு சுத்தமாக அருகதை கிடையாது என்றும் அவர் கூறினார். நான் ’விசித்திரன்’ என்று ஒரு படத்தை எடுத்து உள்ளேன் என்றும், இந்த படம் மட்டும் சரியில்லை என்று சொன்னால் நான் சினிமாவை விட்டே போகிறேன் என்று கூறினார்

மேலும் ’நீ யாருடா அஜித்தை பற்றி பேசுவதற்கு என்றும், அஜித்தை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கூறிய ஆர்கே சுரேஷ் ’விசித்திரன்’ படத்திற்காக 30 கிலோ எடை கூடி இருக்கிறேன் மற்றும் குறைந்திருக்கிறேன் என்றும், அந்த படத்தில் எனது 6 மாத உழைப்பு இருக்கிறது என்றும் கூறினார்.

தயவுசெய்து ஒருவருடைய உடல், கலர் ஆகியவற்றை விமர்சனம் செய்யாதீர்கள் என்றும் அவ்வாறு விமர்சனம் செய்வது தாயை விமர்சனம் செய்ததற்கு சமம் என்றும் ஆர்கே சுரேஷ் ஆவேசத்துடன் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.