close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்சியின் ஒருதலைக்காதல்!

Thursday, October 17, 2019 • தமிழ் Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற முகினையும் மக்களின் பேராதரவை பெற்ற லாஸ்லியா, கவின், தர்ஷன் போன்றவளையும் கோலிவுட் திரையுலகம் வரவேற்க காத்திருக்கும் நிலையில் இவர்களுக்கு முன் நடிகை சாக்சிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

நடிகை சாக்சி ஏற்கனவே விஷாலின் ’ஆக்சன்’ படத்தில் டப்பிங் செய்த நிலையில் தற்போது ஆர்யாவின் அடுத்த படமான ’டெடி’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’டெடி’ படத்தில் ஆர்யாவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் சாக்சி நடித்து வருவதாகவும் இந்த கேரக்டர் தனக்கு புகழைப் பெற்றுத் தரும் என தாம் நம்புவதாகவும் சாக்சி தெரிவித்துள்ளார்

மேலும் ஆர்யா ஒரு சிறந்த நடிகர் என்றும், இயக்குனர் சக்தி செளந்திரராஜன் மிகவும் திறமையாளர் என்றும் கூறிய சாக்சி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒருசில படங்களுக்கும், வெப் சீரிஸ்களுக்கும் தனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் கதை மற்றும் எனது கேரக்டர் குறித்து யோசித்து அடுத்தடுத்த படங்களில் ஒப்புக்கொள்ளவிருப்பதாகவும் சாக்சி தெரிவித்தார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz