close
Choose your channels

'என் ரோஜா நீயா'..'குஷி' படத்தின் சிங்கிள் பாடலில்  சமந்தாவின் க்யூட் ரொமான்ஸ்..!

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா நடித்த ‘குஷி’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அந்த நோயிலிருந்து அவர் குணமாகி உள்ளார். இதனை அடுத்து அவர் தீவிர உடற்பயிற்சி செய்து உடம்பை ஸ்லிம்மாகியுள்ள நிலையில் தற்போது அவர் ‘குஷி’ மற்றும் ’சிட்டாடல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த பாடல் வெளியாகியுள்ள நிலையில் மதன் கார்த்தி தமிழில் இந்த பாடலை எழுதியுள்ளார். ’என் ரோஜா நீயா’ என்று தொடங்கும் இந்த பாடலை அப்துல் வஹாப் பாடி கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடலில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் ரொமான்ஸ் ரியாக்ஷன்கள் பார்ப்பதற்கு க்யூட்டாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், முரளி ஷர்மா, லட்சுமி, வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடிப்பில் உருவாகும் ‘குஷி’ படம் சமந்தாவுக்கு வெற்றி படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos