close
Choose your channels

நயன்தாராவை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நயன்தாராவை வார்த்தைகளால் கொஞ்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நயன்தாரா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
 

விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினர் இருக்கும் இந்த புகைப்படத்தில் நயன்தாரா கேக் வெட்டுவது போலவும் நயன்தாராவை கட்டிப்பிடித்து சமந்தா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது போன்ற புகைப்படங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.