close
Choose your channels

உதயநிதி படத்தில் இணைந்த இருபெரும் இசையமைப்பாளர்கள்

Monday, March 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பொங்கல் தினத்தில் உதயநிதி நடித்த 'கெத்து' திரைப்படம் ரிலீஸாகிய நிலையில் அவருடைய அடுத்தபடமான 'மனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படமான 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி' மற்றும் விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். உதயநிதி படத்திற்கு அனிருத் பாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, விவேக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மதி ஒளிப்பதிவும், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்யும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.