close
Choose your channels

ஆன்மீகப் பயணம் சென்றுள்ள இளம் நடிகைகள்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் இளம் வயதிலேயே நம்பிக்கை நட்சத்திரமாக  மாறியிருப்பவர் நடிகை சாரா அலிகான். காதலை மையமாகக் கொண்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். அதேபோல மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒருசில படங்களிலேயே தனக்கென தனித்த ஒரு அடையாளத்தை பிடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக வலம்வருகின்றனர்.

சைஃப் அலிகான் மற்றும் அம்ரித்சிங் ஜோடிகளின் மகளான நடிகை சாரா அலிகான் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்த “கேதார்நாத்” எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதை நினைவூட்டும் விதமாக தற்போது சாரா அலிகான் மற்றும் ஜான்விகபூர் இருவரும் கேதார்நாத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சோஷிய மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான கரண் ஜோஹரின் இயக்கத்தில் Dhadak எனும் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து தற்போது பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான் இருவருக்கும் இடையே பாலிவுட் நடிகைகள் என்பதைத் தவிர பயணக் காதலர்கள் என்ற ஒற்றுமையும் உண்டு. அந்த வகையில் தற்போது கேதார்நாத்திற்கு சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

இதைத்தவிர சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங் தொகுத்து வழங்கும் பிக் பிக்சர் எனும் வினாடி வினா நிகழ்ச்சியில் நடிகை ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு நெருக்கம் கொண்ட தோழிகள் இருவரும் தற்போது கேதார்நாத்தில் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.