close
Choose your channels

தமிழக வீரர் நடராஜனிடம் பேசிய தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள்: வீடியோ வைரல்

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றார். அதில் அவர் அபாரமாக பந்து வீசியதை அடுத்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பெற்று தனது திறமையை நிரூபித்தார். ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய நடராஜன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தமிழக வீரர் நடராஜனை தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சரத்குமார் மற்றும் ராதிகா வீடியோ காலில் பேசியுள்ள வீடியோவை ராதிகா சரத்குமார் தன்னுடைய சமூக வலைதள பதிவு செய்துள்ளார். மொட்டை தலையுடன் சிரித்த முகத்துடன் சரத்குமாருடன் அவர் பேசும் காட்சிகள் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. நடராஜன் அவர்களிடம் பேசியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக ராதிகா சரத்குமார் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த உரையாடலில் சரத்குமார் கூறியபோது, ‘நான் பிரச்சாரத்திற்கு செல்லும்போது உங்களை பற்றி தான் நிறைய இடங்களில் பேசுகிறேன். திறமை இருந்ததால் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது போல் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வரலாம் என்று உங்கள் பெயரை பயன்படுத்தி பேசினேன். நானும் ராதிகாவும் உங்கள் வீட்டிற்கு வர முடிவு செய்தோம். ஆனால் நீங்கள் வீட்டில் இல்லை என்று கேள்விப்பட்டதால் வரவில்லை. இன்னொரு நாள் கண்டிப்பாக வீட்டிற்கு வருகிறோம். நீங்களும் சென்னை வந்தால் எங்களுடைய வீட்டிற்கு வாருங்கள். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது, வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.