close
Choose your channels

பாரீஸ், பல்கேரியாவுக்கு பயணம் செய்யும் சாயிஷா

Wednesday, September 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை சாயிஷா, முதல் படத்திலேயே அனைவரும் கவரும் வகையில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். குறிப்பாக அவருடைய நடனம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் சாயிஷாவின் இரண்டாவது படமான விஜய்சேதுபதியின் 'ஜங்கா' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய்' இயக்குனர் கோகுல் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாரீஸ், பல்கேரியா, ஆம்ஸ்டர்டாம் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் பாரீசுக்கு பயணம் செய்யவிருப்பதாகவும் சாயிஷா கூறியுள்ளார். 

பாரீசில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், முதல் படம் போலவே இந்த படத்திலும் தனக்கு ஏற்ற கேரக்டர் அமைந்துள்ளதாகவும் சாயிஷா கூறியுள்ளார். இந்த படத்தை விஜய்சேதுபதியே தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.