close
Choose your channels

ஓவியாவின் அடுத்த படத்தின் முழு விபரங்கள்

Wednesday, September 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நாயகி ஓவியாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஓவியா ஆர்மியினர்களும், ஓவியா புரட்சி படையினர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஓவியாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடும் 'ஹரஹர மஹாதேவா' பிரிமியர் காட்சியின் போது இதே நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. 'யாமிருக்க பயமே' பட இயக்குனர் இயக்கும் இந்த படத்திற்கு 'காட்டேரி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஹீரோவாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார் ஓவியா.

டிகேவின் இந்த படமும் காமெடி மற்றும் த்ரில் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.