close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பிரபல விஞ்ஞானி: புகைப்படம் எடுத்த பிரபல நடிகர்!

Saturday, July 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பிரபல விஞ்ஞானி ஒருவர் சந்தித்த நிலையில் இந்த புகைப்படத்தை பிரபல திரைப்பட நடிகர் ஒருவர் எடுத்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘ராக்கெட்டரி’ சமீபத்தில் வெளியானது. நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்து இருந்தார். நடிகர் மாதவன் தயாரித்து இயக்கிய இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்த நிலையில் இந்த படத்திற்கு தனது வாழ்த்தை தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதில், ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு ஆளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷன் நம்பி நாராயணன் வரலாற்றை மிக தத்ரூபமாக நடித்து இயக்கி உள்ளார் மாதவன். இயக்குனராக முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர்களுக்கு இணையானவர் என்று நிரூபித்திருக்கிறார். இந்த படத்தை கொடுத்ததற்காக மாதவனுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் என ரஜினி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தித்து உள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படத்தை நடிகர் மாதவனே எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.