close
Choose your channels

சீமானுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்-தயாரிப்பாளர்

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படம் விஜய்யின் 'சர்கார்' படத்துடன் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கே.சுப்பிரமணியம் என்பவர் இயக்கவுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நாயகியாக அனுசித்தாரா நடிக்கவுள்ளார். இவர் பிரபல மலையாள நடிகையும் சமீபத்தில் வெளியான 'பொதுநலன் கருதி' படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் ஆர்.கே.சுரேஷ். விரைவில் மராத்தி மொழி படம் ஒன்றை இயக்கி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.