close
Choose your channels

தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? என்ன கேரக்டர் தெரியுமா?

Friday, February 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’காதல் கொண்டேன்’ ’புதுப்பேட்டை’ ’மயக்கம் என்ன’ உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் செல்வராகவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் இயக்கத்தில் உருவான ’பா பாண்டி’ என்ற திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் விரைவில் இரண்டாவது படத்தை இயக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து செல்வராகவன் சமீபத்தில் கூறிய போது ’தனுஷ் இயக்க இருக்கும் படத்தின் முழு திரைக்கதையும் எனக்கு தெரியும், அந்த கதை மிகச் சிறந்த கதை என்று தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நான் நடிக்க விரும்புகிறேன், அந்த கேரக்டரை என்னால் மிகச் சரியாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் செல்வராகவன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.