close
Choose your channels

செல்வராகவன் அடுத்த படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ’சாணிக்காகிதம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.