close
Choose your channels

உன்னை சேர்த்து 25 கொலை: 'சாணிக்காகிதம்' டிரைலர்

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை 24 கொலை செய்து உள்ளேன் என்றும் உன்னை கொலை செய்வதை சேர்த்து 25 கொலை என்றும் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனத்துடன் கூடிய ‘சாணிக்காகிதம்’ படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் மே 6ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது.

3 நிமிடத்திற்கு மேல் இந்த ட்ரெய்லரில் செல்வராகவன் 24 கொலை செய்ததாக கூறுகிறார். ஆனால் கீர்த்தி சுரேஷ் 25 கொலை செய்ததாக கூறிய நிலையில் ஒரு கொலை கணக்கு இடிக்கிறதே என கேட்டவரை, உன்னையும் சேர்த்து 25 கொலை என கீர்த்தி சுரேஷ் கூறுவதுடன் இந்த ட்ரெய்லர் முடிவுக்கு வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர், படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.