close
Choose your channels

அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸா?

Friday, August 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று விஜய்சேதுபதியின் 'மேற்குத்தொடர்ச்சிமலை', சத்யராஜின் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', பிரபுதேவாவின் 'லஷ்மி' மற்றும் கிருஷ்ணாவின் 'களரி' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஆகஸ்ட் 30ஆம் தேதி வியாழன் அன்று வெளியாகிறது. அதனையடுத்து ஆகஸ்ட் 31ஆம் தேதி தினேஷின் 'அண்ணனுக்கு ஜே', விக்ரம் பிரபுவின் '60 வயது மாநிறம்', பா.விஜய்யின் 'ஆருத்ரா', சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' , அரவிந்தசாமியின் 'நரகாசுரன்' மற்றும் 'வஞ்சகர் உலகம்' என ஏழு திரைப்படங்கள் அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கடைசி நேரத்தில் ஒருசில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.