அதிரடி முடிவால்... அரசியல் வாதிகளை கிறுகிறுக்க வைத்த பாலியல் தொழிலாளிகள்!
மேற்கு வங்கத்தில், தேர்தல் சமயங்களில், வாக்குறுதி கொடுக்கும் அரசியல்வாதிகள், அதனை நிறைவேற்றுவது இல்லை எனக்கூறி இம்முறை அதிரடி முடிவை எடுத்து அரசியல்வாதிகளை கிறுகிறுக்க வைத்துள்ளனர் பாலியல் தொழிலாளர்கள்.
மற்ற மாநிலங்களை விட, மேற்கு வங்கத்தில் தான் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். வறுமையின் காரணமாக இந்த தொழிலை செய்து வரும் இவர்கள், அவர்களுக்கு என முறையான அடையாள அட்டை, அரசு கொடுக்கும் சலுகைகள் வேண்டுமென, பல வருடங்களாகவே கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், அரசியல்வாதிகளிடம் முறையிடுகின்றனர். இதற்கு அரசியல்வாதிகள் வெற்றி பெறும் வரை தங்களுடைய பிரச்சினைகளை கேட்டு விட்டு, பதவிக்கு வந்ததும் அதனை கண்டு கொள்வதே இல்லை என்பது இவர்களுடைய மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
இதனால் இம்முறை அனைத்து பாலியல் தொழிலாளர்களும், நோட்டாவிற்கு மட்டுமே வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.இவர்கள் இப்படி கூறியுள்ளது அரசியல் வாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.