close
Choose your channels

நல்ல படம், ஆனா பாக்கத்தான் ஆளில்லை: 'செயல்' விளம்பரம்

Monday, May 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'ஷாஜஹான்' படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கிய படம் 'செயல்'. இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு இன்று வித்தியாசமான வாசகங்களுடன் கூடிய விளம்பரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படம் வெளியாகி மூன்றே நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 'நல்ல படம் ஆனால் பாக்கத்தான் ஆளில்லை' என்ற வாசகங்களுடன் இந்த படத்தின் விளம்பரம் இன்று வெளிவந்துள்ளது.,

வடசென்னையில் உள்ள ஒரு ரவுடியை ஹீரோ எதிர்பாராதவிதமாக அடித்துவிடுவார். இதனால் அந்த ரவுடியின் மாஸ் இறங்கிவிட மீண்டும் அதே இடத்தில் ஹீரோவை அடிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடுகிறார் அந்த ரவுடி. அவர் ஹீரோவை அடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை. காதல், காமெடி மற்றும் ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஜன் தேஜேஸ்வர், தாருஷி, ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன் உள்பட பலர் நடித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.