close
Choose your channels

ஷாருக்கான் மேனேஜருக்கே ரூ.50 கோடி சொத்தா? அப்ப சம்பளம் எவ்வளவு?

Thursday, February 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கானுக்கு ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் இருக்கும் நிலையில் அவரது மேனேஜருக்கு சுமார் 50 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவருக்கு சம்பளம் எத்தனை கோடியாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் மேனேஜராக பூஜா தத்லானி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து கொண்டு வருகிறார். இவரை தேர்வு செய்தது ஷாருக்கானின் மனைவி கௌரி கான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷாருக்கானின் ரெட் சில்லி உட்பட ஒருசில நிறுவனங்களையும் கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பூஜா புது வீடு கட்டி குடி போன நிலையில் இந்த கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு ஷாருக்கான் தனது மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ஷாருக்கானின் மேனேஜராக பணிபுரியும் பூஜா தத்லானிக்கு ஆண்டுக்கு ஏழு முதல் ஒன்பது கோடி வரை சம்பளம் கிடைப்பதாகவும் இவரது சொத்து மதிப்பு சுமார் 50 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos