close
Choose your channels

ஷங்கர் - ராம்சரண் தேஜாவின் டைட்டில் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர் சி 15’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிடுள்ளனர். இந்த படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் நடித்து வரும் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் தேஜாவின் கேரக்டருக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் அது மட்டுமின்றி இது ஒரு பான் இந்திய திரைப்படம் என்பதால் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒரு டைட்டிலாக இந்த டைட்டில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம்சரண் தேஜா, க்யாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் சமீர் முகமது படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos