close
Choose your channels

நேற்று 'மொட்டசிவா கெட்டசிவா', இன்று 'சிவலிங்கா'

Thursday, July 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா' படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்துள்ள நிலையில் இன்று அவருடைய அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான 'ஷிவலிங்கா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் தமிழில் தயாரிக்கவுள்ளதாகவும், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வாய்ப்பு இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் 'கபாலி' மற்றும் '2.0' படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழிலும் இந்த படம் 'சிவலிங்கா' என்ற பெயரிலேயே தயாராகிறது.
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர் பி.வாசு, வாசுவின் மகன் சக்தி, ராகவா லாரன்ஸ், ரித்திகாசிங் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.