close
Choose your channels

ஏர்போர்ட்டில் எதிர்பாராத சந்திப்பு: ஸ்ருதிஹாசன் பதிவு செய்த புகைப்படம் வைரல்

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரண்டு பிரபல நடிகைகள் ஏர்போர்ட்டில் எதிர்பாராமல் சந்தித்து கொண்டதை அடுத்து அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் அவர் ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சுருதிஹாசன் பிரபாஸின் ’சலார்’ விஜய் சேதுபதியின் ‘லாபம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபாஸ் நடித்து வரும் ’சலார்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த கீர்த்தி சுரேஷை சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பின்போது நலம் விசாரித்துக் கொண்டு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.