close
Choose your channels

ஆண் நண்பருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்: வைரல் புகைப்படம்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது ஆண் நண்பருடன் தீபாவளியை கொண்டாடியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக சாந்தனு ஹசாரியா என்பவருடன் நட்பின் உள்ளார் என்றும் இந்த நட்பு விரைவாக காதலாக மாறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தீபாவளி தினத்தை முன்னிட்டு ’எங்கள் மனம் நிறைந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படம் என்றும், உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தில் சுருதி ஹாசன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாந்தனு ஹசாரியா ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் காதலிப்பதாக இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை இருவரும் இணைந்து வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.