close
Choose your channels

5 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இளம் நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபி சத்யராஜ் நடித்த நீண்டகாலமாக தாமதமான படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ’ரங்கா’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவானது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் ஆன பின்னரும் ஒருசில காரணங்களால் அவ்வப்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மே 13ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மே 13ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என சிபிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். வினோத் இயக்கத்தில் விஜய் செல்லையா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ராம்ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சிபிராஜ் நடித்து முடித்துள்ள ’மாயோன்’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும், அவர் தற்போது ரேஞ்சர், வட்டம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.