close
Choose your channels

சித்தார்த் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி!

Sunday, June 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சித்தார்த், ஜிவி பிரகாஷுடன் நடித்து வரும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டன

சித்தார்த் நடித்து வரும் திகில் படம் 'அருவம்'. இந்த படத்தை இயக்குனர் சாய்ஷேகர் என்பவர் இயக்கி வருகிறார். சித்தார்த் ஜோடியாக காத்ரீன் தெரசா நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல். படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சித்தார்த், காத்ரீன் தெரசா இருவரது முகத்திலும் ரத்தக்கோடு தெரியும் இந்த போஸ்டர், இதுவொரு திகில் படம் என்பதை உறுதி செய்துள்ளது

மேலும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிடவுள்ளார். 'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றிக்கு பின் இந்த படம் அவருக்கு இன்னொரு வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.