close
Choose your channels

'இது நம்ம ஆளு' படத்தின் உறுதியான, இறுதியான ரிலீஸ் தேதி

Saturday, May 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


இந்நிலையில் இந்த படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த படம் மே 27-ல் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சென்னையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் பெயர்களோடு சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையின் ஒருசில திரையரங்குகளில் அட்வான்ஸ் புக்கிங்கும் ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே இதை வைத்து பார்க்கும்போது இந்த படம் கண்டிப்பாக வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.