close
Choose your channels

சிம்பு-கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்: அட்டகாசமான அறிவிப்பு

Sunday, April 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தில் நடிக்கவுள்ள நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த முறை சிம்புவுடன் நடிகர் கவுதம் கார்த்திக் இணையவுள்ளார். சிம்பு, கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணையவுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் நார்தன் இயக்கவுள்ளார். இவர் கன்னடத்தில் ஒருசில படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சிம்புவின் 45வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.