close
Choose your channels

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Thursday, March 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. மேலும் கௌதம் கார்த்திக்குடன் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் அவர் விரைவில் ’கொரோனா குமார்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் உருவான ’மஹா’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவின் 50வது படமான இந்தப் படத்தை ஜமீல் இயக்கி உள்ளார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்த இந்த படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்துஅவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.