close
Choose your channels

சிம்பு இசையில் பாடிய டி.ராஜேந்தர்-உஷா தம்பதி

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகம் செய்த நடிகர் சிம்பு, அவர் ஹீரோவாக நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' என்ற படத்திற்கு இசையமைத்தும் வருகிறார். சிம்பு இசையமைக்கும் முதல் படமான இந்த படத்தில் ஏற்கனவே அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் சிம்புவின் இசையில் உருவான இன்னொரு பாடலில் டி.ராஜேந்தர்-உஷா தம்பதியினர் ஒரு பாடல் பாடியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 'வா முனிம்மா வா' என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களின் ஒலிப்பதிவையும் சிம்பு முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் அவர்களின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன் பாடகராகவும், கீர்த்தனா என்பவர் பாடகியாகவும் அறிமுகம் ஆகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சேதுராமன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் வரும் 15 முதல் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.