close
Choose your channels

'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா? கோலிவுட்டில் பரபரப்பு 

Sunday, May 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ’சந்திரமுகி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை அடுத்து 15 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் வேட்டையின் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகா இந்த இரண்டாம் பாக படத்திலும் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சமீபத்தில் ஜோதிகா அளித்த பேட்டியில் ’சந்திரமுகி 2’ படத்திற்காக இதுவரை தன்னை யாரும் அணுகவில்லை என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது முன்னதாக சந்திரமுகி படத்திலேயே சந்திரமுகி கேரக்டருக்கு சிம்ரன் தான் நடிக்க இருந்தார். ஒருசில நாட்களும் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் திடீரென அவர் கர்ப்பமானதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பதும் அதன் பிறகு ஜோதிகா இந்த படத்தில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.