close
Choose your channels

படம் முழுவதும் சிங்கிள் கேரக்டர், சிங்கிள் ஷாட்: ஹன்சிகா அடுத்த படத்தின் ஆச்சரிய தகவல்

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

படம் முழுவதும் சிங்கிள் கேரக்டர் மற்றும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் நடிகை ஹன்சிகா நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஹன்சிகா தெலுங்கில் ஹன்சிகா நடித்துக் கொண்டிருந்த ’105 மினிட்ஸ்’ என்ற திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்று ஹன்சிகாவின் பிறந்தநாளை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

அதில் இந்த படத்தில் ஒரே ஒரு சிங்கிள் கேரக்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அது மட்டுமின்றி படம் முழுவதையும் ஒரே சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா தஸ்ஸா என்பவர் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது

தெலுங்கில் இந்த படம் உருவாகி இருந்தாலும் தமிழிலும் டப் செய்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இயக்குனர் பார்த்திபன் அவர்கள் சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.