close
Choose your channels

செம குத்தாட்டம் போடும் சிவகார்த்திகேயன்.. 'மாவீரன்' வீடியோ வைரல்..!

Wednesday, February 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

மேலும் இன்று ‘மாவீரன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வரும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில் சிவகார்த்திகேயன் செம குத்தாட்டம் போடும் காட்சி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு குஷியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரத் சங்கர் இசையில் உருவான இந்த பாடல் நிச்சயம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் மிஷ்கின், சுனில், சரிதா உள்பட பல நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.