close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்களுக்கு செம விருந்து!

Thursday, September 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அக்டோபர் 9ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முதல் முதலாக சிவகார்த்திகேயன் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.