close
Choose your channels

இந்திய சினிமாவின் 'டான்' உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியான பதிவு

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சினிமாவின் ‘டான்’ உடன் சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்கள் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ’டாக்டர்’ படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக அவரது அடுத்த படமும் 100 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் ‘டான்’ வெற்றி குறித்து திரையுலகினர் பலர் பாராட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன் ‘இந்திய சினிமாவின் ‘டான்’ உடன் ஒரு சந்திப்பு என்றும் அவருடனான இந்த 60 நிமிட சந்திப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் என்றும் எனக்காக நேரம் ஒதுக்கிய ’தலைவர்’ அவர்களுக்கு ‘டான்’ படக்குழுவினர் சார்பில் நன்றி என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.