மெகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Friday,March 08 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', தளபதி விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை 'கடைக்குட்டி சிங்கம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை சமீபத்தில் இயக்கிய பாண்டியராஜ் இயக்கவுள்ளார். மேலும் இவர்தான் சிவகார்த்திகேயனை 'மெரீனா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர் என்பதும் அதனை தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சன்பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இணையும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற் படத்தில் நடித்து முடித்துவிட்டு ரவிகுமார் மற்றும் பி.எஸ்,மித்ரன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தாறுமாறு தலைவரே... வேற லெவல்: சிவகார்த்திகேயனை பாராட்டிய காமெடி நடிகர்!

சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து தற்போது அவர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை: ஓவர்டைம் வேலை செய்யும் இயக்குனர்!

அஜித் நடித்து வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 ஜிவி பிரகாஷ்-சித்தார்த் படத்தின் டைட்டில் இதுதான்

'பிச்சைக்காரன்' பட இயக்குனர் சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று காலை வெளியாகவிருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

கமல் கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஆண்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தபோது திரையுலகினர் பெரும்பாலானோர் அவரது கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது

'சிந்துபாத்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கி வரும் 'சிந்துபாத்' படத்தின் செக்ண்ட்லுக் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவிருப்பதாக