close
Choose your channels

கமல் கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை

Friday, March 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஆண்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தபோது திரையுலகினர் பெரும்பாலானோர் அவரது கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாசர் மனைவி கமீலா, ஸ்ரீப்ரியா, சினேகன் போன்ற ஒருசிலர் மட்டுமே அவரது கட்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழ்த்திரையுலகின் பிரபல காமெடி நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இன்று கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்த கோவை சரளா, வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த கோவை சரளாவை, 'சதி லீலாவதி' படத்தில் தனக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிக்க வைத்தவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் தினமான இன்று கமல் கட்சியில் ஒரு முக்கிய பெண் பிரபலம் இணைந்துள்ளது அக்கட்சியினர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.