close
Choose your channels

தாறுமாறு தலைவரே... வேற லெவல்: சிவகார்த்திகேயனை பாராட்டிய காமெடி நடிகர்!

Friday, March 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து தற்போது அவர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் ஒருசில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என தெரிகிறது.

இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் பால சரவணன் நடித்து வந்த நிலையில் அவருடைய காட்சிகள் கொண்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது . இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது ஒவ்வொரு நிமிடமும் தாறுமாறு தலைவரே... வேற லெவல் ஃபன், வேற லெவல் மகிழ்ச்சி. உங்களுடைய இனிமையான அன்பிற்கும், அருமையான இந்த வாய்ப்பிற்கும் மாபெரும் நன்றிகள் தலைவரே’ என சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பால சரவணனின் இந்த ஒரே ஒரு டுவீட்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.