close
Choose your channels

மெகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!

Friday, March 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', தளபதி விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை 'கடைக்குட்டி சிங்கம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை சமீபத்தில் இயக்கிய பாண்டியராஜ் இயக்கவுள்ளார். மேலும் இவர்தான் சிவகார்த்திகேயனை 'மெரீனா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர் என்பதும் அதனை தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சன்பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இணையும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற் படத்தில் நடித்து முடித்துவிட்டு ரவிகுமார் மற்றும் பி.எஸ்,மித்ரன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.