close
Choose your channels

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் அடுத்த அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம் 

Friday, March 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்களை அவ்வப்போது படக்குழுவினர் மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டு, சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி விட்டது என்பது தெரிந்ததே. சூர்யா பாடிய மாறா தீம்’, ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடிய ‘வெய்யோன் சில்லி’ மற்றும் செந்தில் கணேஷ் பாடிய ‘மண்ணுராண்ட’ ஆகிய பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த பாடலை ஒரு இளம் பாடகி பாடியதாகவும் இந்தப் பாடல் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இந்த பாடலை ’ரவுடிபேபி’ மற்றும் ’சண்டக்காரா’ ஆகிய பாடல்களைப் பாடிய ‘Dhee' என்பவர் பாடியிருக்கலாம் என்றும், இவர் பாடிய பாடல் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்றும் ரசிகர்கள் பதிவு செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.