close
Choose your channels

கமல்-பிரபாஸ் படத்தில் இணையும் சூரி நாயகி.. ஆசை நிறைவேறியதாக அறிவிப்பு..!

Friday, February 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் நடித்து வரும் ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் சூரி படத்தின் நாயகியாக நடித்து வரும் நடிகை இணைந்துள்ள நிலையில் தன்னுடைய ஆசை நிறைவேறி விட்டதாக தெரிவித்துள்ளார்

உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் திரைப்படம் ’கல்கி 2898ஏடி’ . சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திர கூட்டங்கள் இருக்கும் நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை அன்னாபென் இணைந்துள்ளார்

இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்த நிலையில், தற்போது சூரி நடித்து வரும் ’கொட்டுக்காளி’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ’கல்கி 2898ஏடி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். இது குறித்த தகவலை அவரே வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் அந்த ஆசை இந்த படத்தின் மீது நிறைவேறிவிட்டது என்று கூறிய அன்னாபென், தெலுங்கில் இதைவிட ஒரு நல்ல அறிமுகம் தனக்கு கிடைக்காது என்றும் பெருமையுடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.