close
Choose your channels

விஜய்யுடன் மீண்டும் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'மெர்சல்' படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி சூப்பர் ஹிட் ஆனது. இருப்பினும் இந்த நிறுவனம் தனது அடுத்த பட அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் 'சர்கார்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மீண்டும் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க விஜய்யிடம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் மீண்டும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.