close
Choose your channels

சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? அப்ப சூர்யா என்ன ஆச்சு?

Saturday, October 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சூரரை போற்று’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ’சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை ’கேஜிஎஃப்’ என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த Hombale Films நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் தயாரித்த ’கண்டாரா’ என்ற திரைப்படத்தின் டிரைலரை சிம்பு வெளியிட்டார் என்பதும் சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் கர்நாடக மாநில ரிலீஸ் உரிமையை இந்நிறுவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தை முடித்துவிட்டு சிம்பு படத்தின் பணிகளை சுதா கொங்கரா தொடங்குவார் என்றும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு தற்போது ‘பத்து தல’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்த இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.