close
Choose your channels

எஸ்பிபிக்கு இரங்கல்: அஜித்தை மறைமுகமாக தாக்குகிறாரா அரசியல் விமர்சகர்?

Monday, September 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது நிகழ்ச்சிக்கு செல்லும் வழக்கம் இல்லாத நயன்தாரா கூட அறிக்கை ஒன்றின் மூலம் தனது இரங்கலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யை விட எஸ்பிபியால் அதிக பலன் அடைந்தவர்கள் அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லாத நிலையில் விஜய் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். 

இதில் அவர் அஜித்தை தான் மறைமுகமாக தாக்குவதாக நினைத்துக்கொண்டு அஜித் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் திரையுலகை சேர்ந்தவர்கள் பலர், எஸ்பிபியால் தான் அஜித்துக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது என்றும், அதுமட்டுமின்றி எஸ்பிபியின் மகன் சரண், அஜித்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்றும், அவ்வாறு இருந்து அஜித் எஸ்பிபியின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் இது குறித்து விளக்கமளித்து வருகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள இந்த நேரத்தில் மாஸ் நடிகர்கள் நேரடியாக இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்றால் எஸ்பிபியின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் ரசிகர்களால் தர்மசங்கடம் ஏற்படும் என்றும், அதனை தவிர்ப்பதற்காகவே ரஜினி, கமல் உள்பட பல பிரமுகர்கள் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்குச் செல்லவில்லை என்றும், அந்த வகையில் அஜித்தும் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்று இருந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்திருக்கலாம் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே அஜித் இறுதி சடங்கிற்கு செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் அஜீத் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எஸ்பிபியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட விஜய்யை பாதுகாப்பாக அனுப்பி வைக்க காவல்துறையினர் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை வீடியோ மூலம் அனைவரும் தெரிந்து கொண்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமன்றி எஸ்பிபியின் குடும்பத்தினருக்கு அஜித் கண்டிப்பாக போன் மூலம் இரங்கல் தெரிவித்து இருப்பார் என்றும் மற்றவர்கள் போல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து விளம்பரம் தேடும் பழக்கம் உள்ளவர் அஜித் அல்ல என்றும் அஜீத் ரசிகர்கள் சமாதானம் கூறி வருகின்றனர். 

முழுக்க முழுக்க விளம்பரமும், மார்க்கெட்டிங்கும் சூழ்ந்துள்ள இந்த விளம்பர உலகில் இரங்கல் தெரிவிப்பதில் கூட தன்னை விளம்பரப்படுத்தி கொள்பவர்கள் அதிகம் இருக்கும் நிலையில் எதிலும் விளம்பரம் தேடாமல் இருக்கும் அஜித் மீது இவ்வகையான விமர்சனங்கள் எழுவதில் வியப்பில்லை என்றும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.