close
Choose your channels

ஷங்கரின் மகள்களுக்கே ஆட்டோகிராப் போட மறுத்த சூப்பர் ஸ்டார் நடிகர்!

Sunday, February 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கரிடம் ஆட்டோகிராப் வாங்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவருடைய மகள்களுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் ஆட்டோகிராப் போட மறுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு என்பதும் அவர் நடிப்பில் உருவான ’சர்க்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படம் வரும் மே மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மகேஷ்பாபு, ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். ஒரு முறை தான் தனது குடும்பத்துடன் நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இரண்டு பெண்கள் தன்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டதாகவும், தற்போது குடும்பத்துடன் தனிப்பட்ட நேரம் செலவளிக்க வந்துள்ளதால் ஆட்டோகிராப் போட மறுத்து விட்டதாகவும் கூறினார்.

அப்போது தன்னுடைய நண்பர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்ட இரண்டு பெண்கள் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதன் பிறகு ஷங்கரை நேரில் பார்த்து ஆட்டோகிராப் போட்ட மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.

மேலும் ஷங்கரின் மகள்கள் இருவரும் ஒரு பிரமாண்ட இயக்குனரின் மகள்கள் என்ற பந்தா இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருந்தார்கள் என்றும் அது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த பேட்டியில் மகேஷ் பாபு கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.