close
Choose your channels

தலைவர் 169' படத்தின் அட்டகாசமான அறிவிப்பு: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ

Thursday, February 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தலைவர் 169’திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்த வீடியோ ஒன்று கடந்த சில மணி நேரங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’தலைவர் 169’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் நிலையில் ’தலைவர் 169’ படத்திற்கு அறிவிப்பு வெளியான அன்றே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.