close
Choose your channels

தனுஷின் இரட்டை வேடம்: 'நானே வருவேன்' படத்தின் மாஸ் ஸ்டில்!

Thursday, February 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ படத்தில் புதிய ஸ்டில் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகும் ’நானே வருவேன் ’படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே. கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த படத்தின் ஸ்டில் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தனுஷின் அட்டகாசமான இரட்டைவேட கெட்டப் உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் , ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் புவன சுந்தர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.