close
Choose your channels

புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினிகாந்தின் நெகிழ்ச்சியான இரங்கல்!

Wednesday, November 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி காலமான நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புனித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

புனித் ராஜ்குமார் அவர்கள் அக்டோபர் 29ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகமே ஒட்டுமொத்தமாக இரங்கல் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மறைவின்போது சென்னை காவேரி மருத்துவமனையின் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புனித் ராஜ்குமார் மறைவே அவருக்கு தெரியாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புனித் ராஜ்குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் தனது மகளின் செயலியில் குரல்வழி மூலம் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.